ஜனநாயக கடமையாற்றிய திரை நட்சத்திரங்கள்..!

share on:
Classic

மக்களவை தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்கு பதிவு தமிழகத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரை நட்சத்திரங்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.

வாக்கு பதிவு காலை 7 மணிக்கு துவக்கிய உடன், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல, நடிகை த்ரிஷாவும் வாக்களித்தார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கொளதம் கார்த்திக் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா தனது குடுப்பத்தினருடன் வந்து வாக்களித்தார். சென்னை பட்டினப்பாக்கதில் உள்ள வாக்கு சவடியில் நடிகை குஷ்பூ வாக்களித்தார். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிக்கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சவடியில் கமலஹாசனுடன் அவரது மகள் சுருதிஹாசன் தங்களது வாக்கை பதிவு செய்தனர். இதே போன்று பாடலாசிரியர் வைரமுத்து, பாடகி சிம்மையி, செந்தில் உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

News Counter: 
100
Loading...

Ragavan