கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்

Classic

வடகிழக்கு மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசாமில் உள்ள மாணவர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினரும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு எதிராக மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், திரிபூரா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind