புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்..!

share on:
Classic

புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பென்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சமூக வலைத்தளங்களில் மர்மநபர்கள் இழிவாக பேசி செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் மரங்களைப் போட்டு போராட்டம் நடத்துவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பென்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் கடைகளை அடைத்து ஊர்வலமாகச் சென்று கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீது கிராம மக்கள் கல்வீச்சு நடத்தியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். காவல்துறை வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டி.ஐ.ஜி லலிதா உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் போராட்டம் காரணமாக பென்னாமராவதி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

 

News Counter: 
100
Loading...

Ragavan