விழுப்புரத்தில் இரு பிரிவினரிடையே மோதல் : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..

share on:
Classic

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. 

செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள கமலக்கண்ணியம்மன் கோயிலில்  திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய திருவிழாவாக திருத்தேர் வடம் பிடித்தல் விழா நேற்று மாலை  நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாட்டு கச்சேரியின் போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து   விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை அதிரடிப்படையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 10-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதற்றமான சூழல் காரணமாக விழுப்புரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya