மாணவர்கள் கவனத்திற்கு...10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி..!

share on:
Classic

2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது.

கணக்கு பாடத்தில் புதிய முயற்சி:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கணக்கு பாடத்தில் இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தி உள்ளது சிபிஎஸ்இ. அடுத்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  எழுத உள்ள மாணவர்கள் கணக்கு பாடத்தில் உள்ள இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையை தேர்வு செய்யலாம். இது அவர்களின் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுத்தேர்வை எழுதப்போகும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

 

என்னென்ன நிலைகள்:

கணக்கு பாடத்தில் உள்ள இரண்டு நிலைகளில் ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கணக்கு பாடம். இரண்டாவது நிலை முதல் நிலையை விட சுலபமானதாக இருக்கும். முதல் நிலை “ஸ்டாண்டெர்டு மேத்தமெட்டிக்ஸ்”(Standard Mathematics)என்றும், இரண்டாவது நிலை “பேசிக் மேத்தமெட்டிக்ஸ்”(Basic Mathematics) என்றும் அழைக்கப்படும். பாடத்திட்டம், வகுப்பறைப் பாடம் மற்றும் உள்மதீப்பீடு ஆகியவை இரண்டு நிலைகளுக்கும் ஒன்றாகவே இருக்கும். மாணவர்கள் வருடம் முழுவதும் முழுவீச்சில் தங்கள் பாடங்களை படிப்பதற்கும் மற்றும் மாணவர்கள் தங்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தங்கள் நிலைகளை தேர்வு செய்யவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

 

எப்போது தேர்வு செய்ய வேண்டும்:

மாணவர்கள் 10-ஆம் வகுப்புக்கு மேல் கணக்கு பாடத்தை தொடர்வதாக இருந்தால் நிலையான கணிதத்தையும், அல்லது கணக்கு பாடத்தை 10-ஆம் வகுப்புக்கு மேல் தொடர விரும்பாதவர்கள் அடிப்படை கணிதத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். பள்ளிகள் தேர்வு எழுதப்போகும் மாணவர்களின்  பட்டியலை சிபிஎஸ்இ-க்கு ஆன்லைனில் சமர்பிக்கும் போது மாணவர்கள் தங்களின் நிலையை தேர்வு செய்யலாம். ஒருவேளை ஒரு மாணவர் கணக்குப் பாடத்தில் தோல்வியுற்றால், மாத்தமெட்டிக்ஸ் பேசிக் மாணவர், மேத்தமெட்டிக்ஸ் பேசிக் கம்பார்ட்மெண்டல் (Mathematics basic compartmental exam)தேர்வையும், ஸ்டாண்டெர்டு மாத்த்மெட்ட்டிக்ஸ் மாணவர் மேற்சொன்ன இரண்டு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

News Counter: 
100
Loading...

aravind