2024-ஆம் ஆண்டுக்குள் தூய்மையான குடிநீர் விநியோகிப்பதே அரசின் இலக்கு - மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

share on:
Classic

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் விநியோகிப்பதே மத்திய அரசின் இலக்கு என, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

நதி நீர் பராமபரிப்பு, குடிநீர் பற்றாக்குறை குறித்து விவாதிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நேற்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகவத், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியின்படி வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் விநியோகிப்பதே மத்திய அரசின் இலக்கு என்று கூறினார். 14 கோடி குடும்பங்களுக்கு இன்னும் தூய்மையான குடிநீர் சென்றையவில்லை என தெரிவித்த அவர், நீர்வளங்கள் பாதுகாக்கப்பட்டு, தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan