துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம்

Classic

நான்காவது நிதியியல்  கமிஷனின் ஆணைப்படி துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

நீண்ட நாட்களாக டெல்லியில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு முறையாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, பணியாளர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தக் கோரியும், 4வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கக் கோரி உத்தரவிட வலியுறுத்தியும், டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், 4வது ஊதிய கமிஷனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத்தொகையை வழங்கும்படியும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.
 

News Point One: 
துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
News Point Two: 
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
News Point Three: 
4வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு
News Counter: 
200

Parkavi