சட்டப்பேரவை தொடர் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை...

share on:
Classic

சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட புதிய திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தண்ணீர் தட்டுபாடு, வறட்சி, குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிப்பது உள்ளிட்டவையும் ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan