ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இரங்கல்..!

share on:
Classic

நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலகத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜே.கே.ரித்தீஷின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில், அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டார் என்ற செய்திக்கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், கட்சித் தலைமை மீது விசுவாசத்துடன் பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan