அத்திவரதர் தரிசன கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்..!

share on:
Classic

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. அத்திவரதரை தரிசிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி சென்னையைச் சேர்ந்த சாந்தி, நடராஜன் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி தலா 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்திவரதரை தரிசிக்கி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, அத்திவரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ கோவிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக அத்திரவரதரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுபதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan