முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை...

share on:
Classic

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி 2-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். அப்போது குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், பொதுவிநியோகம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் ஆய்வறிக்கையை மாதந்தோறும், தம்முடைய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற ஆய்வுக்கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தமது தலைமையில் நடைபெறும் என்றும் முதலமைச்சர், அப்போது தெரிவித்தார். இந்தநிலையில், 2-வது நாள் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருவதால், காரணமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் முதல்வருடனான ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

News Counter: 
100
Loading...

Ragavan