“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு”  அறிவோம் மகத்துவம் !

share on:
Classic

“பிள்ளையைப் பெத்தா கண்ணீர்;
தென்னையைப் பெத்தா இளநீரு” 

 

என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. அதற்கேற்றாற் போல் தென்னை மரத்தின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

இளநீர் - தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழு வளர்ச்சி பெற்ற தேங்காயாக மாற சுமார் 1 ஆண்டு ஆகும். ஆனால் சுமார் 6 மாதமாகி முழு வளர்ச்சி பெறாத நிலையில் இளந்தேங்காய் இளநீருக்காக பறிக்கப்படுகிறது.

தேங்காய் - தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது. 

 • தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. 
 • தேங்காப்பால் - சமையலுக்கு , உலர் தேங்காப்பூ - இனிப்புப் பண்டங்கள்

 • கருப்பட்டி , கள்ளு , சிரட்டை நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது

 • தென்னோலை , கிடுகு , ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்
 • மரம் , விறகு , பொச்சுமட்டை , பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
 • பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
 • தென்னை ஓலையை கொண்டு கூரை முடையலாம்.இது குளுமையை தரும்.
 • தென்னை ஓலையை கொண்டு கூரை முடையலாம்.இது குளுமையை தரும்.
 • வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெயை குடிக்கலாம்.

 • வெட்டுக் காயங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இதன் எண்ணெயை பயன்படுத்தலாம்.
 • கொட்டாங்குச்சிகள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 • இளம் ஓலைகளை அழகாகப் பின்னி திருவிழா காலங்களில், திருமண வைபவங்களிலும் தோரணமாக் தொங்கவிடலாம்.
 • தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.

 • விசிறி
 • குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்
 • குரும்பட்டி - தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்
 • தென்னை மரத்தின் அனைத்து வித பொருள்களும் ஒவ்வொரு தேவைகளுக்கு பயன்படுகின்றன.

 • இதன் வேரைக் கசாயமிட்டு பருக படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.
 • தேங்காயும், அதன் தண்ணீரும் வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.
 • தேங்காயின் சதைப் பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மைச் சக்தியை அதிகரித்து வயிற்றுப்பூச்சிகளைச் சாகடிக்கிறது.
   
News Counter: 
100
Loading...

youtube