இறந்தவர்களை ஒப்படைக்கவும் லஞ்சம்..மரணித்து போன மனிதம்..

Classic

கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்க  மனசாட்சியை அடகு வைத்து உறவினர்களிடம்  மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி பல மனங்களை ரணமாக்கியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தினமும் வரும் இறந்த உடல்களை  உடற்கூறாய்வு செய்தபின்பு அவர்களின் உறவினர்களிடம்  2000, 3000 என ஆளுக்கு ஏற்றார்போல பணத்தை வாங்கி பொதுமக்களை வேதனைக்கு உள்ளாக்கி  வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் பரமசிவம். இவர் இறந்தவர்களின் உடலை ,உடற்கூறாய்வு முடிந்து வாங்க வருபவர்களிடம் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 

அத்துடன் பணம் தந்தால் தான் பிணத்தை எடுக்க கையெழுத்திடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக்,வாட்ஸ்அப் என வேகமாக பரவிவருகிறது. பரமசிவத்தின் பேரம் காவலர் முன்பே அரங்கேறியதுதான் வேதனையிலும் வேதனை. பரமசிவம் இதற்கு முன் இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவராவார்.

 

News Counter: 
100

aravindh