தமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..! சென்னை, கோவைக்கு எச்சரிக்கை...

share on:
Classic

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொண்ட குழு, இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி கோயம்புத்தூரில் குடியேறியதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6 பேரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும் அவரின் பெயர் இலியாஸ் அன்வர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் 6 பேரும் ஆண்கள் என்றும், அவர்கள் இந்துக்கள் போல மாறுவேடத்தில் விபூதி, குங்குமம் பூசிக்கொண்டு நடமாடலாம் என கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோவை நகரம் முழுவதும், பாதுகாப்பு மற்றும் தீவிர சோதனை பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு ரோந்துப் பணிகள் நடத்தப்பட்டுவருகிறது. கோவையை அடுத்து, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சில முக்கய இடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், 6 தீவிரவாதிகளில் 3 பேரின் புகைப்படத்தை கோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan