கோவை தனியார் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை..!!

share on:
Classic

கோவை தனியார் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவி, வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி அருகே வாய்க்கால் மேட்டில் 20 வயது மதிக்கத்தக்க, இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, சாலையோரத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி உத்தரவின் பேரில் கொலையாளியை பிடிக்க, ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

vinoth