பேருந்து விபத்தில் மாணவர் உயிரிழப்பு..மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்..!

share on:
Classic

ஹரினானா மாநிலத்தில் பேருந்து விபத்தில் மாணவர் உயிரிழந்ததைக் கண்டித்து, 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. 

கர்னல் மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் பயின்றுவந்த மாணவர், இரு தினங்களுக்கு பேருந்து விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்வி நிறுவனம் அருகே பேருந்து நிறுத்தம் இல்லாததே, மாணவர் உயிரிழப்புக்கு காரணம் என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், தாங்கள் பயின்றுவரும் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்கவேண்டும் எனக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2-வது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind