இருபிரிவினரிடையே மோதல் - 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் அரியலூரில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானை சின்னத்தை மற்றொரு பிரிவினர் உடைத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan