சிங்கத்துடன் ஒத்தைக்கு ஒத்தை மோதி வென்ற அதிசய மனிதர்...!

share on:
Classic

அமெரிக்காவில், ஜாகிங் சென்ற போது தன்னை பின்தொடர்ந்து வந்து, தாக்க முயன்ற சிங்கத்தை வெறும் கைகளாலேயே அடித்துக் கொன்றுள்ளார் நபர் ஒருவர். 

தாவீது 2.0 :
'காட்டிற்கே ராஜா'' என்று அழைக்கப்படும் சிங்கத்திடம் சிக்கியவர்கள் இதுவரை தப்பித்ததே இல்லை. பைபிளில் கூட சிங்கத்தின் வாயை கிழித்து கொன்ற தாவீதின் கதையை தான் நாம் இதுவரை கேட்டிருப்போம். ஆனால் இந்த காலத்திலும் ஒரு தாவீது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆம்... மலை சிங்கம் ஒன்றை கையாலே அடித்து கொன்ற தாவீது 2.0-வின் கதை தான் இது. அந்த பலசாலி மனிதரை பற்றி வேறு எந்த விவரமும் தெரியாத நிலையில் இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீ போல பரவி வருகிறது. 

பின்தொடர்ந்து வந்த சிங்கம் :
அழகிய காலை பொழுதில் வழக்கம் போல் மலை அடிவார பகுதியில் ஜாகிங் சென்றுள்ளார் அந்த நபர். அப்போது சிங்கம் ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அருகே வந்ததும்  அந்த சிங்கத்தின் உறுமல் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த போது அவர் அதிர்ந்து போனார். அவருக்கு முன்பு சிங்கம் ஒன்று கடித்துக்குதற தயாராக நின்று கொண்டிருந்தது. முதலில் பயந்து நடுங்கினாலும் வேறு வழி இல்லை என்று நினைத்தவர் அதனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்ய தொடங்கினார். ஆனால், அதற்குள் அவர் மேல் பாய்ந்த சிங்கம் அவரது முகம் மற்றும் இடுப்பு பகுதிகளில் கடித்து குதறியது. 

சிங்கத்தை கொன்ற கதை :
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தவர் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் தலையில் அடிக்க முயன்றுள்ளார். பின்பு அதுவும் முடியாமல் போக தன் கைகளையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார். தன் கையால் தொடர்ந்து பல முறை அந்த சிங்கத்தை தாக்கிய அவர் இறுதியில் அதை சாகடித்துள்ளார். உடல் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் திரும்ப எழுந்து அவரே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார். அவரின் உடலில் இருந்த மிகப்பெரிய பற்காயங்களை பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினார். பின்பு நடந்ததை அவர்களிடம் விவரித்த அவர் கட்டு போட்டுக்கொண்டு சத்தமே இல்லாமல் நகர்ந்துள்ளார். 

 

News Counter: 
100
Loading...

priya