மிக மோசமாக முடிந்த மும்பை பங்கு சந்தை..அதிர்ந்த நிறுவனங்கள் !

share on:
Classic

மும்பை பங்கு சந்தை மிக மோசமாக முடிந்துள்ளது. பல நிறுவனங்கள் இதில் சரிந்துள்ளது. 

மும்பையில் இன்று மாலை பங்கு சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 1.89% அதவாது 689 புள்ளிகள் சரிந்து 35,742 புள்ளியில் முடிவடைந்தது. அதுபோல் மற்ற முக்கிய பங்கு வர்த்தக புள்ளிகள் எல்லாமும் பெரிய சரிவில் முடிவடைந்தது. ஐடி துறை, தொழில்த்துறை, டெலிகாம் துறை, போன்ற பல துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்திய ருபாய் மதிப்பும் இன்று மாலைக்கு பிறகு சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான ருபாய் மதிப்பு 70.32 உயர்ந்துள்ளது. ஆனாலும் சில நிறுவனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. எச்பிசிஎல், பிபிசிஎல், கோல் இந்தியா, என்டிபிசி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் இன்று நல்ல உயர்வை சந்தித்தது. இனி வரும் காலங்களில் வர்த்தகம் தொடர்ந்து சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu