’குடி’ மையம்-ஆன திருப்பூர்...24 மணி நேரமும் மது விற்பனை...கள ஆய்வில் காவேரி நியூஸ்..!

share on:
Classic

தமிழகத்தில் 12 முதல் 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படவேண்டும் என்பது விதிமுறை... ஆனால் திருப்பூரில் 24 மணி நேரமும் மது கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகராட்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திருப்பூர்  பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 202 அரசு மது பான கடைகளும், மாநகராட்சி பகுதியில் 75 மது பான கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

மது பானக் கடைகளில் உள்ள பார்களுக்கு அரசு மூலம் டெண்டர் விடப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 162 பார்கள் செயல்பட்டுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மது பான கடைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வியாபாரம் நடைபெற்றநிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் அரசால் மாற்றியமைக்கப்பட்டு, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் இருக்கிறது. 

மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தமிழக அரசு நேரத்தை மாற்றியமைத்தாலும், குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். 24 மணி நேரமும் மது விற்கப்படுவதால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு அரசு மதுபானக் கடைக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்றபோது, மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த சூழ்நிலையில், முன்பைவிட கூடுதலாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். 

மதுபானக் கடைகள் செயல்படும் நேரத்தை அரசு குறைத்திருந்தாலும், தற்போது, சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபான பார்கள் செயல்படக் காரணமாக இருக்கும் ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind