பணமதிப்பிழப்பு செய்தது மக்களின் பணத்தை பறிமுதல் செய்ய அல்ல - அருண் ஜேட்லி விளக்கம்

share on:
Full width title

பொதுமக்களின் பணத்தை பறிமுதல் செய்வதற்காக பணமதிப்பிழப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், பொருளாதாரத்தை சீராக்குவதற்காக மத்திய அரசு எடுத்த முக்கியமான முடிவு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும், கருப்புப்பணத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதே அரசின் முதலாவது நோக்கமாக இருந்ததாகவும் கூறினார்.

வரி செலுத்துவோர் பட்டியலில் லட்சக்கணக்கானோர் இணைந்ததற்கு பணமதிப்பிழப்பே காரணம் என்றும் அவர்  பெருமுதத்துடன் தெரிவித்தார். இம்முடிவால் தனிநபர் வருமான வரி வசூல் 20.2 சதவிகிதமும், நிறுவன வரி வசூல் 19.5 சதவிகிதமும், நேரடி வரி வசூல் 9 சதவிகிதமும் உயர்ந்திருப்பதாக கூறினார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கணக்குகளுக்குள் வரவழைக்கப்பட்டு அவை பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு பயன்படுவதாகவும் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும், பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் நோக்கம் சீராண பொருளாதாரம் மட்டுமே தவிர மக்களின் பணத்தை பறிமுதல் செய்வது கிடையாது எனவும் விளக்கினார்.

News Counter: 
100
Loading...

sasikanth