சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் : நீதிமன்றம் எச்சரிக்கை

share on:
Classic

நடிகர் சிம்புவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சிம்புவை எச்சரித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்திற்காக சிம்பு 50 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றார். ஆனால் அந்த படத்திற்காக சிம்பு இதுவரை கால்ஷீட் தராததால் அவர் பெற்ற முன்பணத்தை திரும்பித்தர உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குறித்த நேரத்தில் படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்காததால் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக சிம்பு தரப்பில் வாதிடப்பட்து. அதனை ஏற்க மறுத்த நீதிபதி 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 85 லட்சம் ரூபாயாக 4 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான வீடு, கார், மொபைல்,டிவி,மிக்ஸி உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் ஜப்தி செய்ய நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
 

News Counter: 
100
Loading...

aravind