காங்கோ எபோலா - வரலாற்றில் 2வது மிகப்பெரிய நோய்த்தாக்க பேரழிவு என WHO தகவல்

Classic

வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவாக காங்கோவின் எபாலா (Ebola) நோய்த்தாக்கம் பதிவாகி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 426ஆக உயர்ந்திருப்பதாகவும், கடந்த மாதம் வரை 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா நோய்த்தாக்கத்தால் காங்கோவின் சுகாதார நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாகவும், உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவாக காங்கோவின் எபோலா பரவல் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கு ஆஃப்ரிக்காவில் கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை 11,000க்கும் மேற்பட்டோர் எபோலா நோய்த்தாக்கத்தால் உயிரிழந்ததே உலகின் மிகப்பெரிய பேரழிவாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

sasikanth