துலாபாரம் வேண்டுதலின் போது விபத்து : காங்கிரஸ் சசிதரூர் காயம்..

share on:
Classic

திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றிய போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார். 

மலையாளப் புத்தாண்டான விஷு இன்று கேரளாவில் கொண்டாடப்படுகிறது. இன்று மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு தங்கள் பிராத்தனைகளையும் துலாபாரம் எனப்படும் வேண்டுதலை நிறைவேற்றுவர். பழங்கள், நெய், அரிசி, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்கள் துலாபாரத்தில் பயன்படுத்தப்படும். 

இந்நிலையில் இன்று துலாபாரம் வேண்டுதலை நிறைவேற்ற காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தராசில் அமர்ந்த போது, திடீரென தராசு உடைந்து கீழே விழுந்தது. இதில் தராசின் இரும்பு கொக்கியும் தலையில் விழுந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ramya