ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன்வந்ததை மறுத்த காங்கிரஸ் செயற்குழு..!

share on:
Classic

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததை காங்கிரஸ் செயற்குழு மறுத்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத், ரந்தீப் சுர்ஜிவாலா, உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது,  ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் அதனை செயற்குழு ஒரு மனதாக நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

News Counter: 
100
Loading...

vinoth