தொடங்கியது காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம்

share on:
Classic

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ள இந்த படுதோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க டெல்லியில் செயற்குழு கூட்டம் கூடி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 

மேலும் பிரியங்கா காந்தி,  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சித்தராமையா ஆகியோரும் செயற்குழுக் கூட்டத்தில் இடம் பெற்று உள்ளனர். தனது ராஜினாமா குறித்து மூத்த தலைவர்களிடம் பேச உள்ளதாக ராகுல்காந்தி கூறி உள்ளநிலையில் இந்த செயற்குழுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind