திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் இறுதியானதை அடுத்து, திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்கெனவே புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவிடமிருந்து கேட்டு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan