தேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..!

share on:
Classic

தேர்தல் தோல்வியின் எதிரொலியாக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மட்டும் வெற்றி பெற்றார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தோல்வியடைந்தார். இதையடுத்து, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையாக, மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்குமாறு, தேர்தல் பொருப்பாளர்களாக செயல்பட்ட பிரியங்கா காந்தியும், ஜோதிராதித்ய சிந்தியாவும் பரிந்துரைத்தனர். 

இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகளாக இளைஞர்களை நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தேர்தல் தோல்வி எதிரொலியாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind