செக் மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங். எம்.பி. மரணம்..!

share on:
Classic

செக் மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு திடீரென மரணமடைந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, அன்பரசு சென்னை - குமனன்சாவடியில் வசித்து வந்தார், இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், போரூர் தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அண்மையில், செக் மோசடி வழக்கில் அன்பரசு மற்றும் அவரது மனைவி கமலா அன்பரசு ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan