வெற்றியை கொண்டாடும் பாஜக : வெறிச்சோடி காணப்படும் காங்கிரஸ் தலைமை அலுவலகம்..

share on:
Classic

ஒருபுறம் பாஜக வெற்றியை கொண்டாடும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 350 இடங்களிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 103 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

ஒருபுறம் இந்த வெற்றியை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்கு கூடிய ஒரு சில காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் ஈவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

News Counter: 
100
Loading...

Ramya