லக்னோ வரும் பிரியங்கா காந்தி: தொடங்கியது காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி

Classic

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, லக்னோ வருவதையொட்டி, காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கட்சிப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு இன்று அவர் வருகை தருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதி பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும், அவருடன் வருகை தருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, கட்சியின் மாநில தலைமை அலுவலகம் வரை, அவர்களை பேரணியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும், அந்த நகரம் முழுவதும் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

aravind