"பணத்தை கொள்ளையடிப்பது நாட்டின் காவலாளி தான்" : மோடி மீது ராகுல் காந்தி சாடல்

Classic

நாட்டின் காவலாளி என கூறிக்கொள்ளும் மோடியே பணத்தை கொள்ளையடித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், தேசத்தின் காவலாளியான பிரதமர் மோடி நாட்டின் பணத்தையும், விமானப்படையின் பணத்தையும் கொள்ளையடித்து விட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சி அமையும் வரையும் பிரியங்கா காந்தியும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் ஓய்வெடுக்காமல் உழைப்பார்கள் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உத்தர பிரதேச மக்கள் வீதியில் இறங்கி ஆளும் பாஜக அரசை மாநிலத்தில் வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும் என்றார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி அனில் அம்பானியிடம் 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind