கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 18-ல் காங்கிரஸ் முன்னிலை..

share on:
Classic

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 18-ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18-ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மற்ற 2 தொகுதிகளில் இடது சாரிகள் முன்னிலையில் உள்ளன. தொடக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூருக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது அவர் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதே போல் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 10000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி முன்னிலையில் உள்ளார்.

இதேபோல் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட நடிகையும், காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிலா முன்னிலை வகிக்கிறார். போபால் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் முன்னிலையில் உள்ளார், அவரை எதிர்த்து பிரக்யா தாகூர் சிங்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் போட்டி நிலவிய கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகிக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya