மத்திப்பிரதேச ஆளுநருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!

share on:
Classic

ஆட்சியமைக்க அழைக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய பிரதேச ஆளுநரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்தனர்.

230 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் கைப்பற்றின. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஸ்வாதி கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்குகு ஆதரவு அளிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் படி அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கமல்நாத்  தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், போபாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

youtube