3-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

share on:
Classic

மக்களவைத் தேர்தலில், 3-வது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 2 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள முதல் வேட்பாளர்கள் பட்டியலில், அமேதி தொகுதியில், ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், 3-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

அசாம், தெலங்கானா, மேகாலயா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள கவுரவ் கோகாய், சுஷ்மிதா தேவ் முன்னாள் மத்திய அமைச்சர் பவன் சிங் கட்டோவார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேகாலயாவில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்கா டுரா(TURA) தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

News Counter: 
100
Loading...

sajeev