சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதா??

share on:
Classic

அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இருவரும் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டை ஆளும் கூட்டணியை தீர்மானிக்கும் தேர்தல் களமாக உத்திரப்பிரதேசம் மாநிலம் உள்ளது. இங்குள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் யார் பெரும்பான்மை பெறுகிறார்களோ அவர்களுக்கு மத்திய ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அங்கு செல்வாக்கு மிகுந்த கட்சிகளாக விளங்கும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கடந்த டெல்லியில் சந்தித்து பேசினர்.

அப்போது கூட்டணி குறித்து பல முக்கிய விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்த பல முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

youtube