"காங்கிரஸ் கொள்கைகள் காந்தியத்திற்கு எதிரானது"  மோடி விமர்சனம்..!

share on:
Classic

காந்திய சிந்தனைகளுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிப்பதே காங்கிரஸ் கட்சியின் கலாசாரமாக இருந்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்

குஜராத்தில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி காந்தி நடைபயணம் சென்றதன் 89வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சமத்துவமின்மை நாம் பார்த்துள்ள பரம ஏழைகளின் அவலநிலையை நாம் எண்ணிப்பார்த்து சிந்திக்கவும், அந்த நிலையை மாற்றவதற்காக உழைக்கவும் காந்தி நமக்கு கற்றுத்தந்துள்ளார். 

ஆனால், காந்திய சிந்தனைக்கு எதிரான கொள்கையே காங்கிரஸின் கலாசாரமாக இருக்கிறது. சமத்துவமின்மை, சாதிய பாகுபாடு ஆகிய விஷயங்களில் காந்திக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் ஒருபோதும் தயங்கியது இல்லை என்று தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் என்பதும் ஊழல் என்பதும் ஒத்தகருத்துடைய சொற்களாக மாறிவிட்டத்தை நாடு கண்டுள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sajeev