ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!

share on:
Classic

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து, ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, அவர் மீது, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டுமெனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவை தொடர்ந்து மீறுவதால் அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் மனுவுடன் சேர்த்து, இன்று விசாரிப்பதற்காக, இந்த வழக்கை, நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan