தொடர் விடுமுறையால் திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

Classic

தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கி, நேற்று விஜயதசமியுடன் நிறைவடைந்தது. விழாவையொட்டி, தினந்தோறும், பல்வேறு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் மலையப்பசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள் மட்டும் 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தனர். சர்வ தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vijay