தொடரும் குஜ்ஜார் இன மக்கள் போராட்டம்...

share on:
Classic

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கு ஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டம் தொடர்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தின்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் வாகனங்களை தீவைத்துக் கொளுத்தியும், போலீசார் மீது தாக்குதல் நடத்தியும், போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் சவய்மாதோப்பூர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கூடாரம் அமைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் குஜ்ஜார் இன மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News Counter: 
100
Loading...

aravind