முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து : பாஜக தலைவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்..

share on:
Classic

கேரளா பாஜக தலைவர் பிஎஸ். ஸ்ரீதரன் பிள்ளை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய போது முஸ்லீம்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் ஸ்ரீ தரன் பிள்ளை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பாலகோட் தாக்குதல் குறித்த எதிர்க்கட்சிகள் கேள்விகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர் “ நமது ராகுல் காந்தி, யெச்சூரி, பினராயி ஆகியோர்  நமது பாதுகாப்பு வீரர்கள் பாலகோட்டிற்கு சென்று இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் மதம், இனம்.. ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஒருவேளை அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் சில குறியீடுகள் இருக்கும். அவர்களின் ஆடையை அகற்றினால் அதனை தெரிந்து கொள்ள முடியும்” என்று கருத்தை தெரிவித்தார்.

பாஜக தலைவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு கேரளாவில் உள்ள இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையாக சாடிவருகின்றன. அவர் மதரீதியிலான கருத்தை கூறியது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் தலைவர் விஎஸ் சிவஜுட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். முஸ்லீம்களை அவமதிக்கும் விதமாக பேசியதற்கு ஸ்ரீ தரன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

எனினும் தான் அதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என்று ஸ்ரீ தரன் மறுத்துள்ளார். இது மிகப்பெரிய இமாலய பொய் எனவும், சட்ட ரீதியாக இதனை சந்திக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya