இயக்குனர்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சை கருத்து : வடிவேலுவிற்கு தொடரும் கண்டனங்கள்..

share on:
Classic

இயக்குனர்களை அவமதிக்கும் வகையில் பேசிய வடிவேலுவிற்கு பல்வேறு இயக்குனர்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வைகைப்புயல் வடிவேலுவின் ரசிகர்கள் அவரை உலகளவில் என்ற ஹாஷ் டாக் ட்ரெண்டாக்கினர். இதனைத் தொடர்ந்து பிரபல இணையதள சினிமா செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இயக்குனரை கிராபிக்ஸ் இயக்குனர் என்று கூறிய வடிவேலு, இயக்குனர் சிம்புதேவனை ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் அவர் திறமையற்ற இயக்குனர் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்ததுடன், இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்கும்படியும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் நடிகர் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியை தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை தரக்குறைவாக பேசியது மனமுடைய செய்த்து. வன்மம் வேண்டாம், அன்பை மட்டும் பரப்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்சை அரசன் 24 -ம் புலிகேசி படத்தில் இயக்குனர் சிம்புதேவன், அதன் தயாரிப்பாளர் ஷங்கர், மற்றும் வடிவேலு ஆகிய 3 பேருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya