61-வது பழக்கண்காட்சிக்கு தயாராகி வரும் சிம்ஸ் பூங்கா..!

share on:
Classic

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறவுள்ள 61வது பழக்கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்கா பரபரப்பாக தயாராகி வருகிறது

குன்னூர் சிம்ஸ்பூங்காவில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில், கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக பழக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தோட்டக்கலை துறை சார்பாக பழக்கண்காட்சி செய்ய முடிவு செய்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகள் மற்றும் அரிய வகை பழங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஒரு டன் பழங்களை கொண்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உருவங்கள் செய்தும், மயில், மனிதன் போன்ற வடிவமைப்புகள் பல்வேறு பழங்களால் செய்யவும் தோட்டக்கலை திட்டமிட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind