இரவுப்பணியில் தூங்கிய காவலர்கள் : இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை..

share on:
Classic

இரவுப்பணியில் தூங்கிய காவலர்களை இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. 

மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இரவுப் பணியில் உள்ள காவலர்கள் தூங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நேற்று முன் தினம் இரவு திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது விஜயநகர காவல்நிலையத்தில் துணை சப் இன்ஸ்பெக்டர் தூங்குவது கண்டறியப்பட்டது. இதேபோல் சன்யோகிதாகஞ் காவல் நிலையத்திலும், தலைமை கான்ஸ்டெபில் தூங்கியது தெரியவந்தது. அசாத் நகரில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டெபிள் வரவில்லை. மேற்கூறிய மூன்று காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. முகமது யூசுப் குரேஷி தெரிவித்தார். இந்த அதிரடி நடவடிக்கை மற்ற காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 

News Counter: 
100
Loading...

Ramya