காஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் மரணம் தற்கொலை தான்..!!

share on:
Classic

பிரபல காஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் மரணம் தற்கொலை தான் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதலைமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் தான் சித்தார்த்தா. இவர் காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். கடந்த மாதம் 29-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள நேத்ரா வதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடிபார்த்தனர். அப்போது சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.  பின்பு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து மங்களூர் மாநகர காவல் ஆணையர் ஹர்ஷா கூறும் போது வி.ஜி. சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் இது தற்கொலை தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan