ஊழல் புகார் : 22 மூத்த வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு..?

share on:
Classic

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மூத்த வரித்துறை அதிகாரிகளை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை,  தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் பேசிய மோடி வரி நிர்வாகத்தில் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் பேசிய அவர் “வரித்துறை நிர்வாகத்தில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையாக வரிசெலுத்தும் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இது போன்று விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு, கட்டாய ஓய்வளித்த துணிச்சலான நடவடிக்கையை நாங்கள் அண்மையில் மேற்கொண்டோம். எனவே இதுபோன்ற விதிமீறல் நடத்தையை நாங்கள் சகித்து கொள்ள மாட்டோம்” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்தை தொடர்ந்து, வரித்துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் 22 பேரை கட்டாய ஓய்வில் அனுப்பு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 22 பேரும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, மீரட் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வரித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த அதிகாரிகள் மீது சில ஆயிரங்களில் இருந்து லட்சம் வரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதே போல் இந்திய வருவாய் துறையில் பணியாற்றி, ஊழல் புகாரில் சிக்கிய 27 உயரதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya