முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...

share on:
Classic

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று 879 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று காலை முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கலந்தாய்வும், பிற்பகல் முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 6,188 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மே 5-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan