நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி கேள்விக்குறியாக்கியது : திருப்பூரில் பேசிய மோடி குற்றச்சாட்டு

share on:
Classic

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி கேள்விக்குறியாகிவிட்டது எனவும், இடைத்தரகர்கள் மூலம் பேரம் பேசுவது மட்டுமே பாதுகாப்புத் துறை என்று காங்கிரஸ் கட்சியினர் நினைப்பதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை, சென்னை விமான நிலையம் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திருப்பூரில் நேற்று காணொலிக் காட்சி மூலம் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து பேசிய மோடி, “ வானில் இருந்து கடல் வரை காங்கிரஸ் கட்சி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஆட்சியிலிருந்த போது காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு துறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. நாட்டை ஆட்சி செய்ய ஏராளமான ஆண்டுகள் கிடைத்தும் நாட்டின் பாதுகாப்பை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. அவர்களை பொறுத்த வரை பாதுகாப்புத் துறை என்பது இடைத்தரகர்களிடம் பேரம் பேசுவது மட்டும் தான். 

கடந்த கால ஆட்சியை காட்டிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வித்தியாசமானது. குறிப்பாக பாதுகாப்பை அணுகும் முறை முற்றிலும் புதிதானது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டில் இரண்டு பாதுகாப்புத்துறை தளவாட மையங்கள் அமைய உள்ளது. அதில் ஒன்று தமிழ்நாட்டில் அமைய இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பாஜக அரசின் நலத்திட்டங்கள் பலருக்கு மகிழ்ச்சியை தராததால் அவர்கள் என்னை வசைபாடுகிறார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya