திரைப்பட சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை

share on:
Classic

பின்னணி பாடகி சின்மயியை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் பாடகி சின்மயி குரல் எழுப்பினார். இந்நிலையில், சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, கடந்த நவம்பர் 18ம் தேதி சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, சின்மயி தரப்பில் சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

News Counter: 
100
Loading...

sajeev