ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான இணைப்பு மனுக்கள் தள்ளுபடி..!

share on:
Classic

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தொடரப்பட்ட இணைப்பு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் கேட்டறிந்தனர். மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், தொழில் அமைப்புகள் ஆகியவை ஆலைக்கு ஆதரவாக, வழக்கில் தங்களை இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால், மக்கள் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக மனுவில் கூறியிருந்தனர். மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இணைப்பு மனுக்கள், விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்தநிலையில் வேதாந்தா நிறுவனத்தின் முதன்மை மனு மீதான விசாரணை, ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind